சுசூகி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட பர்க்மேன் ஸ்டிரீட் இஎக்ஸ் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 6,500 ஆர்பிஎம்-ல் 8.5 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 10 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். புளூடூத் இணைப்புடன் கூடிய எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. சுசூகி ரைட் கனெக்ட் மூலம் இணைத்துக் கொள்ளலாம். எல்இடி ஹெட் லாம்ப், டெயில் லாம்ப், முன்புற வைசர்கள், டூயல் டோன் சீட், சீட்டுக்கு அடியில் 21.5 லிட்டர் கொள்ளளவு வசதி உள்ளது. மெட்டாலிக் ராயல் பிரான்ஸ், மெட்டாலிக் மேட்டி பிளாக் வண்ணங்களில் கிடைக்கும். ஷோரூம் விலை சுமார் ரூ.1.08 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


