Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கொல்கத்தாவுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 278 ரன் குவிப்பு

புதுடெல்லி: கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி அபாரமாக ஆடி, 3 விக்கெட் இழப்புக்கு, 278 ரன் குவித்தது. ஐபிஎல் 68வது லீக் போட்டி, புதுடெல்லியில் நேற்று நடந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றினர். 6.5 ஓவரில் அணியின் ஸ்கோர் 92 ஆக இருந்தபோது அபிஷேக் சர்மா (32 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ஹென்ரிச் கிளாசன், துவக்க வீரர் டிராவிஸ் ரன் வேட்டையை நடத்தியதால், 10.3 ஓவரில், 150 ரன் குவிந்தது. கிளாசன் 17 பந்தில் 50 ரன்களை எட்டினார். 13வது ஓவரில் டிராவிஸ் (40 பந்து, 6 சிக்சர், 6 பவுண்டரி, 76 ரன்) அவுட்டானார். பின், இஷான் கிஷண் களமிறங்கினார்.

14.4 ஓவரில் ஸ்கோர் 200ஐ கடந்தது. தொடர்ந்து, 17.4 ஓவரில், அணியின் ஸ்கோர் 250 ஆனது. இந்நிலையில், வைபவ் அரோரா வீசிய 19வது ஓவரில் இஷான் கிஷண் (29 ரன்) ஆட்டமிழந்தார். அந்த ஓவர் முடிவில், தான் எதிர்கொண்ட 37வது பந்தில் கிளாசன் சதத்தை எட்டினார். இது ஐபிஎல் போட்டிகளில் 3வது அதிவேக சதம். கடைசி ஓவரில் 20 ரன்கள் விளாசப்பட்டதால், 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன் குவித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் 2வது அதிகபட்ச ஸ்கோராக அது அமைந்தது. கிளாசன் (39 பந்து, 9 சிக்சர், 7 பவுண்டரி, 105 ரன்), அனிகேத் வர்மா 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அதையடுத்து, 279 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது.