கோடைகால மின் தேவை 22 ஆயிரம் மெகாவாட் எட்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
10, 15 வருடங்கள் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிரந்தர பணிகள் வழங்கப்படவில்லை என பல்வேறு நபர்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக வரும் பணியாளர்களுக்கு மின்வாரியம் நிரந்தர பணி வழங்க முடியாது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மிக முக்கிய தேவையாக எந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என நிதி துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்தவுடன் மின்சார வாரியத்தில் பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழகத்தில் சோலார் மின் தயாரிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார், நீரேற்று மின் நிலையங்கள் பொருத்தவரை 14, 500 மெகாவாட் கண்டறியப்பட்டுள்ளது அதற்கான ஏலம் மிக விரைவாக தொடங்கப்படும். மாதாந்திர மின்கணக்கீடு கண்டிப்பாக நடைபெறும். விரைவாக ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு மாதாந்திர மின்கணக்கீடு செயலுக்கு வரும்.