Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் ஆணை வழங்கினார்

சென்னை: கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50-ஐ விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு விடுவிப்பதை தொடங்கி வைக்கும் விதமாக, 3 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை முதல்வர் விஜய் நேற்று வழங்கினார்.

கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், கரும்பு உற்பத்தியை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து 2025-26 அரவை பருவத்திற்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் 10.8.2026 அன்று சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அதனை தொடங்கி வைத்திடும் விதமாக நேற்று 3 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை தலைமை செயலகத்தில் வைத்து வழங்கினார்.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 85,000 கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர். இதற்காக, நடப்பு ஆண்டில் ரூ.603 கோடியே 33 லட்சம் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், தலைமைச் செயலாளர் சாய்குமார், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை செயலாளர் வெங்கடேஷ், சர்க்கரை ஆணையர் கண்ணன், கூடுதல் இயக்குநர் அருண்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.