Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பழனி நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் மீது புதிய புகார்!

பழனியில் நிலமோசடி வழக்கில் தொடர்புடையதாக சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேர் மீது ஆயக்குடி காவல் நிலையத்தில் தற்போதைய சார்பதிவாளர் ஈஸ்வரி புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், பழனி அருகே உள்ள ஆயக்குடி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலம் கடந்த மாதம் 7ஆம் தேதி ரூ.9 லட்சத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பத்திரப்பதிவை அப்போது சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

கோவையைச் சேர்ந்த மணி என்பவர், ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவருக்கு அந்த நிலத்தை ரூ.9 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பத்திரப்பதிவுக்கு முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில், ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப்பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தற்போதைய சார்பதிவாளர் ஈஸ்வரி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், நிலத்தை விற்பனை செய்த மணி மற்றும் நிலத்தை வாங்கிய கந்தசாமி ஆகிய இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நிலமோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் பதிவு செய்த மற்றொரு நிலம் தொடர்பாக தற்போதைய சார்பதிவாளரே காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.