Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கிணற்றில் மூச்சுத்திணறி மாணவர்கள் 2 பேர் பலி

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோமேதகவேல் மகன் கவுசிக் (12). 7ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி மகன் நவீன்குமார் (16). இவரும் அதே தனியார் பள்ளியில் பிளஸ் 1 தேர்வு எழுதியுள்ளார். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் 3 பேருடன் நேற்று வெண்குன்றம் கிராமத்தில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர்.

இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் கிணற்றில் குளித்துகொண்டிருக்கும்போது கவுசிக்கு மூச்சு திணறி கிணற்றில் உள்ளே சென்றார். அப்போது நவீன் குமார் மீட்க முயற்சித்துள்ளார். அவரும் கிணற்றில் சிக்கினார். ஒரு மணி நேரம் போராட்டத்துக்கு பின் இருவரும் சடலமாக மீட்கபட்டனர். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.