Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். அரசு பள்ளிகளில் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பெரும்பாலும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

அரசுப் பள்ளிகளில் 50 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே பாடப்புத்தகங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் மாநிலம் முழுவதும் உள்ள பல பள்ளிகளில் முழுமையாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாடப்புத்தகங்கள் இல்லாமலேயே அரசு பள்ளிகளில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் மாணவர்கள் கல்வி கற்பதில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது எடுக்கும் குறிப்பை வைத்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

வகுப்பறையில் போதிய புத்தகங்கள் இல்லாததால், ஒரு பெஞ்ச்சில் அமர்ந்திருக்கும் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் ஒரே புத்தகத்தைப் பகிர்ந்து படிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை முழுமையாக வழங்குவதில் தவெக அரசு கவனம் செலுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்களை வழங்காமல் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுப்பதா என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு புத்தகம் கூட வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளது என்றால் தமிழக கல்வித்துறை மிகவும் கீழே சென்றுகொண்டிருக்கிறது என்று கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

விடுபட்ட புத்தகங்களின் பி.டி.எஃப் (PDF) வடிவங்கள் இணையத்தில் கிடைத்தாலும், கிராமப்புறப் பெற்றோர்களுக்கு இதைப் பற்றிய போதிய தெளிவு இல்லாததால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.