சிவகங்கையில் படியில் தொங்கியபடி பயணித்தபோது இரு பேருந்துக்கு நடுவில் சிக்கி 12ம் வகுப்பு மாணவன் பலி..!!
சிவகங்கை: சிவகங்கை அருகே எனாபுரம் கிராமத்தை சேர்ந்த நாகவேலின் மகன் சந்தோஷ் இவர் சிவகங்கையில் உள்ள மன்னர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் இவரது நண்பரான சூர்யாவும் எனாபுரத்திலிருந்து சிவகங்கைக்கு மினி பேருந்தில் பயணித்துள்ளனர். பேருந்தில் கூட்டம் அதிகரித்ததால் இருவரும் படிக்கட்டில் தொங்கியபடி வந்துள்ளனர்.
பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள பாலத்தை கடந்த நிலையில் பேருந்து ஆதம்பாள்ளிவாசல் அருகே வந்த போது அருகில் இருந்த தனியார் பள்ளிவேன் வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது ஓட்டுனரின் கவனக்குறைவால் இரு பேருந்துகளும் பக்கவாட்டில் மோதி கொண்டது. இதில் படியில் பயணம் செய்ய சந்தோஷ் இடுப்பில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது நண்பர் சூர்யாவுக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சிவகங்கை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
