மதுரை: தஞ்சை மைக்கேல்பட்டியில் தனியார் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஆவணங்களை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஆவணங்களை தாக்கல் செய்ய தஞ்சை மாவட்ட நீதிபதிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தஞ்சை மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.
Advertisement


