Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போராட்ட நாட்களை பணி நாட்களாக ஈடுசெய்ய கூடுதல் நேரம் வகுப்பு எடுப்பதால் முழு ஊதியம்: கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை

சென்னை: பிப்ரவரி மாத போராட்ட நாட்களை பணி நாட்களாக ஈடுசெய்யும் பொருட்டு பிப்ரவரி 26 முதல் கூடுதலாக 2 முதல் 3 மணி நேரம் வகுப்பு எடுப்பதால் முழு ஊதியம் வழங்க கவுரவ விரிவுரையாளர்கள் கல்லூரி முதல்வர்கள் வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி யுஜிசி தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்கள் சங்க மாநில தலைவர் ஜி.சிவகுமார் கூறியுள்ளதாவது;

தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் ரூ.57,700ம்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திவகுப்பை புறக்கணித்து கடந்த 9.2.2026 முதல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, முதல்வர் மாத ஊதியம் ரூ.5 ஆயிரம் மட்டும் உயர்த்தி வழங்க உத்தரவிட்டு அரசாணை எண்.59ஐ அரசு வெளியிட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பிப்ரவரி 26 முதல் பணிக்கு திரும்பிக் கல்விப்பணி செய்து வருகின்றனர்.

போராட்ட நாட்களை ஈடுசெய்யும் பொருட்டு பிப்ரவரி 26 முதல் கூடுதலாக 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை வேலைசெய்து வருவதால் பிப்ரவரி மாதத்திற்கான முழு ஊதியம் ரூ.25 ஆயித்தை வழங்க தமிழக முதல்வர், உயர்கல்வி அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் உயர்கல்வித்துறை ஆணையர் கவனத்திற்கு கொண்டுசென்று முழு ஊதியம் வழங்க வேண்டும் என கல்லூரி முதல்வர்கள் வாயிலாக கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.