Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஹார்முஸ் நீரிணையில் சீனாவின் எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக ஈரான் அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணையில் சீனா, ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தற்கு நன்றியாக ஹார்முஸ் நீரிணையில் சீன எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்நாடு அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் -ஈரான் இடையேயான போர் 5வது நாளாக நீடிக்கிறது. ஈரான், அமெரிக்கா இரு தரப்பும் தாக்குதலை அதிகப்படுத்தியதால் மேற்கு ஆசிய நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது

இந்த நிலையில், ஈரான் நாடு ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதோடு, அந்த வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுத்திருந்தது. இந்த சூழலில், கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரான் தனது போர் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் போரில் சீனா ஈரானுக்கு ஆதரவு தெரித்தது. இந்தநிலையில் ஆதரவு தெரிவித்தற்கு நன்றியாக ஹார்முஸ் நீரிணையில் சீன எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதித்துள்ளது.