வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: சுகாதாரத்துறை
சென்னை: வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காய்ச்சல் அதிகமாக உள்ள பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது, மேலும், பிரசவ தேதி உள்ள கர்ப்பிணிகள் முன்கூட்டியே மருத்துவமனையில் சேர அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர்கள் மழைநீரில் மூழ்காத வகையில் பாதுகாப்பாக வைக்கவும், மருத்துவமனைகளில் மருந்து பொருட்கள், மாத்திரைகள் தட்டுபாடு இல்லாமல் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement