பணியிடங்கள் விவரம்:
1. ஸ்டெனோகிராபர் கிரேடு-2: 5 இடங்கள். வயது: 18 லிருந்து 27க்குள். சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 1 நிமிடத்தில் 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்தில் எழுதி, அதை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களிலும், இந்தியில் 65 நிமிடங்களிலும் டிரான்ஸ்கிரிப்ட் செய்து கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
2. சிஎம்டி (ஒஜி): 2 இடங்கள். வயது: 18 லிருந்து 27க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,900- ரூ.63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் மெக்கானிசத்தில் அறிவுத்திறனும், இலகுரக மற்றும் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுவபம் பெற்றிருக்க வேண்டும்,
3. கார்பென்டர்: 1 இடம். வயது: 18 லிருந்து 37க்குள். சம்பளம்: ரூ.19,900- ரூ. 63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் மற்றும் கார்பென்டர் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ddpmod.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.04.2026.
