சென்னை: தமிழகம் முழுவதும் 147 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே நேரடியாக மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பொது சுகாதாரம், தொற்று நோய் அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறி அரசாணைக்கு விதித்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement


