மாநிலத்தின் சொந்த உற்பத்தியை பெருக்க வழிவகை செய்வதை விடுத்து புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனேதுமில்லை: தமிழக நிதி அமைச்சருக்கு தங்கம் தென்னரசு பதிலடி
சென்னை: மாநிலத்தின் சொந்த உற்பத்தியை பெருக்க வழிவகை செய்வதை விடுத்து புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனேதுமில்லை என்று நிதி அமைச்சருக்கு, தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
நிதியமைச்சர் எனது பதிவில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதையே கருத்தில் கொள்ளாமல், வழக்கம் போல பதிலளிக்க முயன்றிருக்கின்றார். இந்த வருடம் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் 3% என்ற அளவில் மட்டுமே அதிகரித்துள்ளதை என்னுடைய பதிவிலேயே நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன். அதே வேளையில், இறக்குமதியினால் கிடைக்கும் வரி வருவாயினால் தான் ஒட்டுமொத்த வரி வருவாயில் உயர்வு காணப்படுகிறதே தவிர, மாநிலத்தின் சொந்த உற்பத்தி மூலம் ஈட்டப்படும் வரிவருவாயால் அல்ல என்பதையும் எடுத்துக்காட்டி இருக்கின்றேன்.
அண்டை மாநிலங்களின் வருவாய் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது நாம் மிகப்பெரிய அளவில் பின் தங்கியிருக்கிறோம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு, மாநிலத்தின் சொந்த உற்பத்தியையும், விற்பனையையும் பெருக்கிப் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்களுக்கும் வழிவகை காண அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனேதுமில்லை.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.


