Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஒரு விசை படகையும், அதில் இருந்த 8 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

சிறைபிடித்த மீனவர்களை நடுக்கடலில் வைத்து விசாரணை நடத்தி இலங்கை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசும், தமிழக அரசும் துரித நடவடிக்கை எடுத்து 8 மீனவர்கள் மற்றும் விசைப்படகை விடுதலை வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.