சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்திலிருந்து 13 மீனவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து 14 மீனவர்கள்,கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பிரதமர், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவசர கடிதங்கள் எழுதி, கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினர். இதனால் இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தை சேர்ந்த 27 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து இவர்கள் அனைவரும் விமானத்தில் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில், மீனவர்களை வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம், அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
