ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று பாக் ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. மீனவர்கள் தனுஷ்கோடி, ஓலைக்குடா பகுதியில் இந்திய கடல் எல்லையோரம் மாலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எடிசன் புரோகர் என்பவரின் விசைப்படகை சுற்றி வளைத்தனர். அதிலிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த எபிஸ்டன் (29), மத்தியா (22), ஜார்ஜ் ஜெய்சன் (25), ஸ்டீபன்சன் (23), சுவாடன் (25), அனீஸ்டன் (27), மோபிஸ் (21), அந்தோணி பிரதீப் (26), அந்தோணி ப்ரூக்ஸ் ஆகிய 9 பேரை படகுடன் சிறைபிடித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

