Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்கியதாக தகவல்

கொழும்பு: இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்நாடு அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் -ஈரான் இடையேயான போர் 5வது நாளாக நீடிக்கிறது. ஈரான், அமெரிக்கா இரு தரப்பும் தாக்குதலை அதிகப்படுத்தியதால் மேற்கு ஆசிய நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

180 கடற்படை வீரர்களுடன் சென்ற போர் கப்பலில் 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இலங்கையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் ஈரான் போர்க் கப்பல் சென்றபோது தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான போர்க் கப்பலிலில் இருந்து வந்த அவசர அழைப்பை அடுத்து இலங்கை கடற்படையினர் உதவி செய்தனர். 30 பேரை மீட்ட இலங்கை கடற்படையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் போர்க் கப்பல் கடலில் மூழ்கி வருகிறது