Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இலங்கைக்கு கடத்திய ரூ.100 கோடி போதைப்பொருள் பறிமுதல்

ராமேஸ்வரம்: இலங்கை யாழ்ப்பாணம் மன்னார் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் டூவீலரை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். கையில் வைத்திருந்த மூட்டையை வீசிவிட்டு தப்பினர்.

இதையடுத்து போலீசார் மூட்டையை கைப்பற்றி சோதனையிட்டனர்.

அதில், 13 கிலோ 340 கிராம் ஹெராயின் மற்றும் 1 கிலோ 62 கிராம் ஐஸ் போதை பவுடர் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.100 கோடியாகும். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், போதைப் பொருள் தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. இதுபற்றி தமிழக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.