Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உளவுத்துறை அலுவலகங்களில் 455 செக்யூரிட்டி அசிஸ்டென்ட்

பணி: செக்யூரிட்டி அசிஸ்டென்ட் (மோட்டார் டிரான்ஸ்போர்ட்)

மொத்த காலியிடங்கள்: 455. வயது: 28.09.2025 அன்று 27க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், விதவைகளுக்கு அரசு விதிமுறைப்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிடச் சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களில் ஏற்படும் சிறிய பழுதுகளை சரி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.650/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ரூ.550/-.இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, பேசிக் டிரான்ஸ்போர்ட் மற்றும் டிரைவில் ரூல்ஸ், குவாண்டிடெட்டிவ் அப்டிடியூட், ஆங்கில மொழி, நியுமரிக்கல், லாஜிக்கல் ரீசனிங் ஏபிலிட்டி ஆகியவை தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். சென்னை, கோவை, மதுரையில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.www.mha.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.09.2025.