தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ துறையில் சுகாதார ஆய்வாளர் தரம்-II பணிக்கான விண்ணப்பம் வரவேற்பு!

சென்னை: தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் / திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக், பிற சர்வதேச அளவிலான போட்டிகளில், தேசிய, மாநில அளவில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுவருகிறது.

Advertisement

எனவே, அரசாணை நிலை எண்.6, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை (S1) நாள்: 20.02.2019-ன் அடிப்படையில், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களில் 3% இடஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகளில் 01.01.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும். குழு விளையாட்டுகளில், மாநில அளவில் குறைந்தது 50% போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் / பங்கேற்றவர்கள்)

* ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்,

* காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்

* ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

* சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் (ISF) 4 ஆண்டுகளுக் ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்ல ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்.

* 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை, IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்.

* 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்

* தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள்

* பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

* ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்

* சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் (IBSA) காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள்.

தேசிய அளவிலான போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும்)

* தேசிய விளையாட்டுப் போட்டிகள்.

* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள்.

மாநில அளவிலான சாம்பியன்ஷிப்போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும்)

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (SDAT) அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் போட்டிகள்.

போட்டிகளின் அனைத்து நிலைகளிலும், சீனியர் அளவிலான போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும்.

Advertisement

Related News