விண்ட்ஹோக்: தென்ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா பங்கேற்கும் முத்தரப்பு டி.20 தொடர் நமீபியாவில் நடக்கிறது. இதில் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் முதல் போட்டியில் தென்ஆப்ரிக்கா, நமீபியாவுடன் மோதுகிறது. பியோர்ன் ஃபோர்டுயின் தலைமையிலான தென்ஆப்ரிக்கா அணியில் டெவால்ட் பிரெவிஸ் உள்பட அனைத்தும் இளம்வீரர்களே இடம் பெற்றுள்ளனர்.
மறுபுறம் நமீபியா ஆல்ரவுண்டர் கெர்ஹார்ட் எராஸ்மஸ் தலைமையில் களம் இறங்குகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். இதில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் செப். 6ம் தேதி பைனலில் பலப்பரீட்சை நடத்தும்.



