கடந்த 23 ஆண்டுகளாக சர்வதேச மற்றும் தனியார் கிளப் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகள், அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தவர் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது. போர்ச்சுகல் அணிக்காக 234 போட்டிகளில் ஆடிய ரொனால்டோ 146 கோல்களை அடித்துள்ளார். கிளப் மற்றும் தேசத்திற்காக இதுவரை 985 அதிகாரப்பூர்வ கோல்களை ரொனால்டோ அடித்துள்ளார். சிறந்த கால்பந்து வீரருக்கு பாலன் டி யோர் விருதினை 5 முறை பெற்றவர்.
+
Advertisement


