Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் : சபாநாயகர் அப்பாவு பேட்டி

நெல்லை : இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "இந்திய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவே தீர்மானிக்கிறது. இது போன்ற மோசமான நிலை இதுவரை இருந்ததில்லை. பெட்ரோல், டீசலை யாரிடம் இந்தியா வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிக்கிறது?. இந்தியாவின் மோசமான வெளியுறவுக் கொள்கையால், இந்திய தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அண்டை நாடுகள் இந்தியாவுடன் இணக்கமாக இல்லை. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆளுநர் R.N.ரவியின் செயல்பாடுகளை பாஜக அரசு ரசிக்கிறது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நோக்கத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். பல்கலைக்கழக விதிமுறைகள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதுவும் தெரியவில்லை. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவது இல்லை."இவ்வாறு தெரிவித்தார்.