Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தவெக வேளாண் பட்ஜெட்: அரசியல் பேசாமல் பட்ஜெட்டை மட்டும் படியுங்கள் - அமைச்சருக்கு சபாநாயகர் அறிவுறுத்தல்!

சென்னை: 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் மேகதாது விவகாரத்தில் தவெக அரசைக் கண்டித்து, சட்டப்பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து அவைக்கு வந்திருந்தனர்.

பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு முன்பாக, அமைச்சர் வினோத் தவெக கட்சியின் விசில் சின்னம் குறித்தும், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்தும் நீண்ட நேரம் புகழாரம் சூட்டிப் பேசினார். வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் பொது மேடையில் அரசியல் மற்றும் முதலமைச்சர் குறித்த தனிப்பட்ட புகழ்ச்சிகளைத் தவிர்க்குமாறு எதிர்க்கட்சியினர் அவையில் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அவையின் ஒழுங்கைக் கருத்தில் கொண்டு, அரசியல் பேசாமல் பட்ஜெட்டில் இருப்பதை மட்டும் படியுங்கள்; சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை மட்டும் தாக்கல் செய்யுங்கள் என்று அமைச்சருக்கு சபாநாயகர் அறிவுரை வழங்கினார்.