Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சர்வதேச விண்வௌி நிலையத்தில் இருந்து 3 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

மாஸ்கோ: சர்வதேச விண்வௌி நிலையத்தில் 8 மாதங்கள் பணி புரிந்த அமெரிக்க ரஷ்ய விண்வௌி குழுவினர் நேற்று பாதுகாப்பாக தரையிறங்கினர். ரஷ்யாவின் சோயுஸ் பூஸ்டர் எம்எஸ்-28 விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதில் நாசா விண்வௌி வீரரான கிறிஸ் வில்லியம்ஸ் மற்றும் ரஷ்ய விண்வௌி வீரரான செர்ஜி குட் ஸ்வெர்ச்கோவ் மற்றும் செர்ஜி மிகாயேவ் ஆகியோர் பயணித்தனர்.

இந்த குழுவினர் சர்வதேச விண்வௌி நிலையத்தில் 8 மாதங்கள்(241 நாள்கள்) தங்கியிருந்து, புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய ஆய்வுகள் மற்றும் விண்வெளியில் கணினி பொருள்கள் தயாரிப்பு போன்ற ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும், சூரிய கதிர் வீச்சை அளவிட விண்வௌி நிலையத்துக்கு வௌியே சென்று விண்வௌி நடைகளையும் மேற்கொண்டனர். இந்தநிலையில் பணிகளை முடித்து கொண்டு 3 பேர் கொண்ட விண்வௌி குழுவினர் நேற்று பூமிக்கு திரும்பினர். கஜகஸ்தானில் உள்ள ஜெஸ்காஸ்கானுக்கு தென்கிழக்கே உள்ள புல்வௌி பகுதியில் சோயுஸ் எம்எஸ்-28 விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்கியது.