தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்கொரியாவில் எதிர்க்கட்சிகளை முடக்க கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் அதிகளவில் எம்.பி.க்கள் வாக்களித்ததால், அதிபருக்கு பின்னடைவு

Advertisement

தென்கொரியா: தென்கொரியாவில் எதிர்க்கட்சிகளை முடக்க கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் அதிகளவில் எம்.பி.க்கள் வாக்களித்ததால், அதிபருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவசர நிலையை அதிபர் யூன் சுக் இயோல் திரும்பப் பெற்றார். அவர் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.

கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா அமைந்துள்ளது. இது அமெரிக்கா, ஜப்பானின் கூட்டணி நாடாக உள்ளது. அதே தீபகர்ப்பத்தில் அமைந்துள்ள மற்றொரு நாடான வடகொரியா இதற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. வடகொரியா ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுடன் இணக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதனால், அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நீண்டகால பனிப்போர் சூழல் காணப்படுகிறது.

இந்த நிலையில், வடகொரியாவுடன் சேர்ந்து கொண்டு அரசை முடக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என தென்கொரிய அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். இதனை தொடர்ந்து நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ராணுவ தலைவர், முக்கிய தளபதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கட்டுப்பாட்டை தங்கள் கைவசம் கொண்டு வந்து தடுப்புகளை அமைத்தனர். எனினும், உறுப்பினர்களை வரும்படி எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு விடுத்ததுடன், அவசரநிலை அறிவிப்பை நீக்குவதற்காக வாக்களித்தனர். இந்த சூழலில், தென்கொரியாவின் அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே உரையாற்றினார்.

அப்போது அவர், அவசரநிலையை வாபஸ் பெறும்படி சில நிமிடங்களுக்கு முன்பு வலியுறுத்தப்பட்டது. அவசரநிலை நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்ட ராணுவ வீரர்களை வாபஸ் பெற்றுள்ளோம். நாடாளுமன்றத்தின் கோரிக்கையை ஏற்று, அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலை வாபஸ் பெறப்படும் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து தென்கொரியாவில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையை நீக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

Advertisement