தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிநவீன ‘ஏஐ’ திறன்களை கொண்டு 2 மில்லியன் இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு

Advertisement

சென்னை: அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன்களைக் கொண்டு இரண்டு மில்லியன் இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். தமிழகத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசுடன் கூகுள் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஒப்பந்தம் குறித்து, அமைச்சர் டிஆர்பி.ராஜா பேசியதாவது:

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மேட் இன் இந்தியா பிக்சல் 8 போன் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுவது உள்பட மேம்பட்ட உற்பத்தியில் கூகுளுடன் கூட்டிணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு ஏஐ ஆய்வகங்களின் கீழ் உள்ள முக்கிய செயற்கை நுண்ணறிவு முயற்சிகளை ஆராயும். கூகுள் உடனான எங்களின் கூட்டாண்மை, தமிழ்நாட்டை ஒரு ஆக்கப்பூர்வமான ஏஐ மற்றும் மேம்பட்ட எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக நிறுவுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க செயல்பாடு ஆகும்.

நாம் தொழில்நுட்பத்தை மட்டும் பின்பற்றவில்லை, எதிர்காலத்தில் நமது மாநிலத்தை முன்னெடுத்துச் செல்ல அதன் சக்தியைப் பயன்படுத்துகிறோம். முதல்வரின் தொலைநோக்கு பார்வை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம், தமிழக இளைஞர்களை எதிர்காலத்தில் தயார்படுத்தும் ஏஐ திறன்கள் கொண்டிருப்பதையும், ஸ்டார்ட் அப்கள், இயக்கம், சுகாதாரம் மற்றும் பிற நடைமுறை சவால்கள் போன்ற முக்கிய துறைகளில் புதுமைகளை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

2 மில்லியன் இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்காக அதிநவீன AI திறன்களை கொண்டு அவர்களை தயார்படுத்துவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கூகுள் உடனான முயற்சிகளைக் காண எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News