புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியாகாந்தி டெல்லியில் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாத்தை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். லாலுவின் மகளும், எம்பியுமான மிசாபாரதி வீட்டில் லாலுவை சோனியா சந்தித்தார். அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், கல்வி உரிமைச் சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் போன்றவற்றை செயல்படுத்தியது குறித்து இருவரும் நினைவு கூர்ந்தனர். இந்த சந்திப்பின்போது லாலுவின் மகன் தேஜஸ்வியும் உடன் இருந்தார்.
+
Advertisement


