Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

சமூக ஆர்வலர்கள் மாயமான வழக்கு; கோத்தபய ராஜபக்சே நேரில் ஆஜராக விலக்கு

கொழும்பு: இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அவரது சகோதரரும் முன்னாள் அதிபருமான கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, மனித உரிமை ஆர்வலர்களான லலித் குமார் வீரராஜு, குகன் முருகானந்தன் ஆகியோர் 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விளக்க கொழும்பில் செய்தியாளர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் மாயமாகினர்.

இந்த வழக்கில் சாட்சி அளிக்க முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக யாழ்ப்பாணம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.