Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கால்பந்து போட்டியை பார்க்க சென்ற போது நெதர்தலாந்தில் இஸ்ரேல் ரசிகர்கள் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவாளர்களால் பதற்றம்

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ளூர் கால்பந்து அணியான அஜாக்சுக்கும், இஸ்ரேல் கால்பந்து அணிக்கும் இடையிலான போட்டி நடந்தது. இந்த ஆட்டத்தில் இஸ்ரேல் அணி தோல்வியடைந்தது. அதையடுத்து இஸ்ரேல் அணி ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர். விளையாட்டு போட்டியை பார்த்த ரசிகர்கள் ஆம்ஸ்டர்டாம் நகரின் தெருக்களில் சென்ற போது முகமூடி அணிந்த கும்பல்களால் அவர்கள் தாக்கப்பட்டனர். அவர்களில் சிலர் பாலஸ்தீன கொடிகளை ஏந்திக்கொண்டு கூச்சலிட்டனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இஸ்ரேல் பிரஜைகள் குறித்த முழு விபரங்கள் வெளியாகவில்லை என்றாலும், அதனை இஸ்ரேல் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

முன்னதாக கலவரத்தில் ஈடுபட்ட நெதர்லாந்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் கால்பந்து கிளப்பின் ரசிகர்களா? அல்லது பாலஸ்தீன ஆதரவு கும்பலா? என்பதை ஆம்ஸ்டர்டாம் ேபாலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று ஜெருசலேம் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் நெதர்லாந்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நெதர்லாந்தில் இருக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான இடங்கள் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மேற்கண்ட சம்பவத்தை கண்டித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பில், ‘விளையாட்டு போட்டியை பார்ப்பதற்காக நெதர்லாந்து சென்றவர்களை மீட்பதற்காக உடனடியாக இரண்டு மீட்பு விமானங்களை அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். மேற்கண்ட தாக்குதல் சம்பவம் குறித்து இஸ்ரேல் போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘தாக்குதல் சம்பவத்தில் பாலஸ்தீன கும்பலால் இஸ்ரேல் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் 10 இஸ்ரேல் மக்கள் காயமடைந்தனர்; 2 பேரை காணவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.