சென்னை: தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர் போல வீல் சேரில் வந்த நபரை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள 3 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவைத்திருந்த பயணியை கைது செய்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
+
Advertisement



