Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

* கட்டிலில் பயன்படுத்தும் கம்பளியை வெயிலில் 2 மணி நேரம் காய வைத்தால் துர்வாசனை மறையும்.

* கோதுமை மாவில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி, ரொட்டி பிசைந்தால் மென்மையாக சப்பாத்தி, ரொட்டி கிடைக்கும். மேலும்சுவையும் கூடுதலாக இருக்கும்.

* எறும்பு வரும் இடங்களில் எலுமிச்சைச் சாறு அல்லது சிறிது வெள்ளை வினிகர் தெளித்தால் எறும்புகள் வராது.

* நாய், பூனை வளர்ப்போர் வாரம் ஒருமுறை வேப்பிலை கலந்த நீரால் வீட்டை தூய்மை செய்வது அவசியம். இதனால் வீட்டில் கிருமிகள் அண்டாது.

* குளிக்கும் நீரில் துளசி மற்றும் எலுமிச்சைத் தோல் போட உடல் புத்துணர்ச்சி பெறும்.

* அரிசி, பருப்பு வகைகள் பூச்சி பிடிக்காமல் இருக்க ஒரு வறுத்த மிளகாய் சேர்த்து வைத்தால் போதும்.

* ஃபிரிட்ஜில் ஒரு சிறிய கிண்ணத்தில் சோடா பவுடர் கலந்து வையுங்கள். வாசனையுடன் பாக்டீரியாக்களையும் கட்டுப்படுத்தும்.

* துணி மீது கறை ஏற்பட்டால் சாக் பீஸைக் கொண்டு தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து சுண்ணாம்பைத் தட்டிவிடவும். துணிகளின் மேல் ஏற்பட்ட கறைகளை எளிதாக அகற்றிவிடலாம்.

* தேவையில்லாத ஆணி ஓட்டையை அடைக்க, அங்கு சாக்பீஸை வைத்து மறைக்கலாம்.

* பிரெட்டுகள் எக்ஸ்பைரி ஆகிவிட்டால் அதன் ஓரங்களை நீக்கி, சிறிய பந்து போல மீதமுள்ள பிரட்டை உருட்டி வைத்துக்கொள்ளுங்கள். கிச்சனில் கறைகள் ஏற்பட்டிருந்தால் இதை வைத்து கறைகளின் மீது அழுத்தித்துடைத்தால் கறை நீங்கும். இதை ஸ்பாஞ்ச் போல பயன்படுத்துங்கள். காபி மேக்கர், போட்டோ ஃபிரேம்களை சுத்தம் செய்ய இது ஒரு எளிதான வழியாகும்.