Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

*பால் திரிந்து விட்டால் அதை வீணாக்காமல் வெள்ளிப் பாத்திரங்கள், வெள்ளி கொலுசுகளை அதில் 15 நிமிடங்கள் ஊறவைத்து, தேய்த்து எடுத்து துணியால் துடைத்து விட்டால் புதிது போல் பளிச்சென்று இருக்கும்.

* சேப்பங்கிழங்கை வேகவைப்பதற்கு முன்பு கத்தி கொண்டு ஆங்காங்கே கீறி விட்டால் வேகவைத்த பிறகு தோலை உரிப்பதற்கு எளிதாக இருக்கும்.

* தக்காளி சீக்கிரமாக வதங்க, சர்க்கரை ஒரு தேக்கரண்டி சேர்த்தால் போதும்.

* வத்தக் குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் தேங்காய்ப்பால் சேர்த்தால் சரியாகி விடும். சுவையும் கூடும்.

* பூரி உப்பலாக சில மணி நேரம் இருக்க, ரவை ஒரு ஸ்பூன், பச்சரிசி மாவு ஒரு ஸ்பூன் கலந்து கோதுமை மாவை கெட்டியாக பிசைந்து ஊறவிடாமல் உடனே தடிமனாக தேய்த்து பொரித்து எடுக்கவும். உப்பலான, சுவையான பூரி கிடைக்கும்.

* பிரிஞ்சி இலைகளை பொடித்து சமையலறை மூலை முடுக்கு களில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.

* காபி, டீ கறைபடிந்த பீங்கான் பாத்திரங்களை எலுமிச்சை தோல் கொண்டு தேய்த்து கழுவினால் பளிச்சென்று இருக்கும். எலுமிச்சைத் தோலை நறுக்கி எறியாமல் ஃபிரிட்ஜில்

பாதுகாத்து பயன்படுத்தலாம்.

* சாதம் வடித்த கஞ்சியை வீணாக்காமல் அதனுடன் சிறிது உப்பு, சீரகம், மிளகு கலந்து சூப் போல பருகலாம். உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

* பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிவிட்டு எலுமிச்சை சாறில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்தி தயிர் சாதத்திற்கு எண்ணெயில் பொரித்தும், பொரிக்காமலும் சாப்பிடலாம். ருசி சூப்பராக இருக்கும்.

* வெந்தயக் கீரையை வேகவைத்து அத்துடன் தேன் கலந்து கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் உடல் சுத்தமாகும். குடல் புண்கள் குணமாகும். மலச்சிக்கலையும் போக்கும்.

* பிரெட், பர்பி, மைசூர்பாகு போன்றவைகளை வெட்டும் கத்தரிகளை சூடாக்கி வெட்டினால் பிசிறு இல்லாமல் அழகான துண்டுகள் கிடைக்கும்.

* பூண்டு. வெங்காயம் நறுக்கிய பின் கைகளில் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கழுவினால் வாடை வீசாது.

* பருப்புக் கீரையில் வைட்டமின்கள் ஏ,சி மற்றும் பிகாம்ப்ளக்ஸ் அதிகமாக உள்ளது. நுரையீரல் பாதிப்புகளில் இருந்து காக்கும் வல்லமை இதற்கு உண்டு. உடலில் உள்ள கொழுப்புகளையும் கரைக்கும் ஆற்றல் கொண்டது. வெந்நீர் மற்றும் வியர்வையால் ஏற்பட்ட கொப்புளங்கள், தீக்காயங்களுக்கு கீரையை அரைத்து தடவ, குணம் பெறும்.

* வெண்டைக்காய் பொரியல் செய்து முடித்த பின்பு வேர்க்கடலையை பொடித்துப் ே பாட்டு கலந்தால் சுவையும் கூடும். மீதமாகி விட்டால் தயிர் சேர்த்து பச்சடி செய்து சாப்பிடலாம்.

- அ.ப. ஜெயபால்.