* அவரைக்காய்களுடன் 2 பச்சை மிளகாயை சேர்த்து வைத்தால் எறும்பு வராமலிருக்கும்.
* ஸ்டீல் டீ வடிகட்டி அடைப்பிருந்தால் அதை நெருப்பில் சில நிமிடங்கள் காட்டிய பிறகு கழுவினால் அடைப்பு நீங்கி சுத்தமாகும்.
* வெள்ளிப் பொருட்களை பட்டுத் துணியில் சுற்றி மர அலமாரியில் வைத்தால் கருத்து போகாமலிருக்கும்.
* ஊறுகாய் தயாரிக்கும் போது உப்பை லேசாக வறுத்துப் போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது.
* பகோடாவுக்கு கடலைமாவுடன் நான்கில் ஒரு பங்கு பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்தால் மொறு மொறுப்பும், சுவையும் கூடுதலாகும். அதிக சத்தும் கிடைக்கும்.
* சப்பாத்திக்கு கோதுமை மாவுடன் சிறிது மைதா சேர்த்துக் கொண்டால் சப்பாத்தி உப்பலாக இருக்கும்.
* மெது வடைக்கு உளுத்தம் பருப்புடன் சிறிது பச்சரிசியையும் சேர்த்து அரைத்தால் வடை நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.
* பால் புளிக்காமல் இருக்க பாலை காய்ச்சும் போதே ஏலக்காயை சேர்த்தால் போதும், பால் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும்.
* முத்து நகைகளையும், தங்க நகைகளையும் சேர்த்து வைக்காமல் தனித்தனியாக வைத்தால் பளபளப்பு குறையாமல் இருக்கும்.
* பட்டாணி சூப்பில் ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடி செய்து சேர்த்து கொதிக்க விட்டால் சூப் கெட்டியாக இருக்கும்.
* பட்டுப் புடவைகளை சுடுநீரில் அலசக் கூடாது. ஆறு மாதத்துக்கொரு முறை வெயிலில் காய வைத்து, அடிக்கடி மடிப்பை மாற்றி மடித்து வைப்பது அவசியம்.
* வீட்டு ஜன்னல்களுக்கு கரும்பச்சை, கருநீல நிற திரைச் சீலைகளை பயன் படுத்தினால் வெயிலின் தாக்கம் உள்ளே வராது.
* உண்மையான தேன் என்றால் ஒரு காகிதத்தில் ஒரு துளி தேனை வைத்தால் அது காகிதத்தில் உறிஞ்சப்படாமலும், பரவாமலும் அப்படியே நிற்கும்.
* கம்பளி உடைகளின் மேல் பொடி செய்த படிகாரத்தை தூவி வைத்தால் பூச்சி அரிக்காமல் இருக்கும்.
* பூந்திக் கொட்டையை உடைத்து தண்ணீரில் போட்டு பட்டுப் புடவையை ஊற வைத்து துவைத்தால் புடவையில் இருக்கும் பிசுபிசுப்பு நீங்கி பளிச்சிடும்.
- மல்லிகா அன்பழகன்


