Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

* முருங்கை இலை பொரியலுக்கு வேகவைக்கும் போது ஒரு துளி சுண்ணாம்பு சேர்த்து வேகவிட வேண்டும். பூச்சிகள் இருந்தால் இறந்துவிடும்.

*கீரைகள், கிழங்குகள் ஆகியவற்றை மூடி வைத்து சமைக்கக் கூடாது.

*கீரை வேகும் போதே இரண்டு பல் பூண்டும், ஒரு தக்காளியும் சேர்த்து வேக விட வேண்டும்.

* பூரிக்கு மாவு பிசையும் போது சிறிது ரவையைச் சேர்த்தால் பூரி மொறு மொறு என இருக்கும்.

*மோர்க் குழம்பில் சிறிது முருங்கைக் கீரை சேர்த்துக் கொதிக்க விட்டால் குழம்பு மணமாக இருக்கும்.

* மாம்பழக் குழம்புக்கு தேங்காய், பச்சைமிளகு, மஞ்சள், சீரகம் அரைக்கும் போது சிறிதளவு பச்சரிசியும், சேர்த்து அரைத்தால் குழம்பு சந்தனம் போன்று கெட்டியாக இருக்கும்.

* தேங்காய் குடுமி எல்லாம் எடுத்து உடைக்கும் முன் ஐந்து மணித்துளிகள் குளிர்ந்த நீரில் மூழ்க வைத்து எடுத்து உடைத்தால் தேங்காய் சரியாக இருபாதியாக உடையும்.

* மாங்காய் ஊறுகாய் போடும் போது, மாங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, மிளகு பொடி சேர்த்து சிறிதளவு தேங்காய்ப்பாலும், நல்லெண்ணெயும் சேர்த்தால் விரைவில் ஊறி விடுவதோடு, சாப்பிடுவதற்கு சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

* எக்காரணம் கொண்டும் எந்தக் காயையும் மூடி வைத்து வேகவிடக் கூடாது. அதில் உள்ள கெட்ட வாயு மீண்டும் பதார்த்திலேயே தங்கி வாயு உபாதைகளை ஏற்படுத்தும்.

* குழம்பு வகைகள் தாளிக்கும் போது, வெங்காய வடகப் பொடி சேர்த்து தாளித்தால், குழம்பு மணமும், சுவையும் கூடும்.

N.சாந்தி கண்ணன்.