* தேங்காய்ப் பால் எடுக்கும்போது சிறிது சமையல் உப்பைச் சேர்த்தால் நிறைய பால் வரும்.
* பக்கோடா மாவுடன் சிறிது ரவையை கலந்து செய்தால் பக்கோடா ஆறிய பிறகும் மொறு மொறுப்பாக இருக்கும்.
* ஒரு கப் மாவிற்கு ஒரு ஸ்பூன் வீதம் ரவையை பிசைந்து பூரி சுட்டால் பூரி உப்பலாக வரும்.
* ஆம்லெட் போடும் போது முட்டையில் கொஞ்சம் பால் கலந்து செய்தால் ஆம்லெட் சுவையாக இருக்கும்.
* மோர் குழம்பு செய்து இறக்கும் முன் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டால் அதன் ருசியே தனி.
* செம்பருத்திப் பூக்களை காலையில் இரண்டு மென்று தின்றுவர மலச்சிக்கல் சரியாகும்.
* வேப்பம் இலையை கசக்கி டைனிங் டேபிளில் வைத்து விட்டால் ஈக்கள் வராது.
* கீரை பயத்தம் பருப்பு கூட்டுச் செய்யும்போது ஒரு கப் பாலை விட்டால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* ஆணி அடிக்கும்போது நுணியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும் லியோ.
* டூல் பாக்ஸில் ஒரு கரித்துண்டை போட்டு வைத்தால் ஈரம் இழுக்கப்பட்டு துருபிடிக்காமல் இருக்கும்.
* சேனைக்கிழங்கை புளி நீரில் வேகவைத்து விட்டால் சாப்பிடும் போது சுவையாக இருக்கும்.
* மஞ்சள் பொடி, கற்பூரப் பொடி இரண்டையும் கலந்து கழிவு நீர் செல்லும் இடங்களில் வைத்தால் கரப்பான் பூச்சிகள் வராது.
* ஓம வாட்டரும், தேனும் கலந்து குடித்தால் செரிமானக் கோளாறுகள் சரியாகும்.
* குளவி அல்லது தேனீ போன்றவைகள் கொட்டி விட்டால் அந்த இடத்தில் சுண்ணாம்பை தடவவும்.
* கத்தியின் முனையை உப்பில் அழுத்தி எடுத்து மீன் மற்றும் மட்டன் வெட்டினால் சுலபமாக வெட்ட முடியும்.
- விமலா சடையப்பன்.
