* அதிக நாள் நெய் இருக்க வேண்டும் என்றால் காய்ச்சிய நெய்யில் கல் உப்புக் கட்டி போடவும்.
* இட்லி நல்ல மிருதுவாக இருக்க உளுந்து அரைத்தவுடன் ஃபிரிட்ஜில் ½ மணி நேரம் வைக்கவும்.
* வாழைப்பூ நறுக்கப் பயன்படுத்திய தண்ணீரை பூச்செடியில் விட அதிகமாக மொட்டு விடும்.
* பெருங்காயம் கட்டியாக வாங்கும் பொழுது டப்பாவில் பெருங்காயத்துடன் ஒரு பச்சைமிளகாய் போட மிருதுவாக இளக்கமாகும்.
* பச்சை மஞ்சள் கிடைக்கும் பொழுது வாங்கிவைத்துக் கொண்டு சமையலில் தினம் 4 வட்டமாக நறுக்கி சேர்த்து வர குடல் புண் வராது.
* தட்டை செய்யும் பொழுது உளுந்து மாவுடன் பொட்டுக்கடலை மாவை பாதி சேர்த்து செய்தால் தட்டை கரகரப்பாக இருக்கும்.
* பண்டிகை காலங்களில் இனி அதிகம் கடலை மாவு இல்லாது, உளுந்து மாவில் குழந்தைகளுக்கு தின்பண்டம் செய்து கொடுக்கவும்.
* மழைகாலங்களில் மொட்டை மாடியில் பாத்திரத்தை வைத்து மழை நீர் சேகரித்து சுவாமி விக்ரஹம் விளக்கி தேய்க்கும் பொழுது கடைசியில் அதில் அலம்பி துடைக்க அதிக நாள் பளபளப்பாக இருக்கும்.
* புடவைக்கு பின் போடும்போது ஜாக்கெட்டில் சிக்காமல் இருக்க சிறு மணியை கோர்த்து வைத்து போட டக்கென அவிழ்கலாம். பின் சிக்காது.
* பருப்பு வேக வைக்க மஞ்சள் பொடி போடுவதை விட பச்சை மஞ்சள் சிறிது நறுக்கி சேர்க்க பருப்பு இன்னும் வாசமாக இருக்கும்.
* சாம்பார் தயார் செய்து இறக்கும் போது அதில் ஒரு அரை எலுமிச்சைச் சாறு பிழிய சுவையும் மணமும் கூடும்.
- ரமாமகேஸ்வரி. அதிக நாள் நெய் இருக்க வேண்டும் என்றால் காய்ச்சிய நெய்யில் கல் உப்புக் கட்டி போடவும்.


