ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட கோடியாக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 150 கிலோவாட் பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிஎஸ்ஜி கிளட்ச் ஸ்டாண்டர்டு அம்சமாக அனைத்து வேரியண்ட்களிலும் இடம் பெற்றுள்ளது. கோடியாக் ரக கார்கள் அனைத்திலும் சொகுசு கார்களுக்கான வசதிகளோடு மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் லவுஞ்ச் வகை, மதிப்பு மற்றும் ஆடம்பர அம்சத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஸ்போர்ட்லைன் வேரியன்ட்டிலும் கூடுதல் அம்சங்கள் உள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரலில் ஸ்போர்ட்லைன் மற்றும் செலக்ஷன் எல் அண்ட் கே டிரிம்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சொகுசு அம்சங்கள், பின்னர் லவுஞ்ச் வேரியன்ட் மூலம் தற்போது மூன்று வேரியண்ட்களில் இடம் பெற்றுள்ளன. அடாப்டிவ் லைட்டிங் சிஸ்டம், வேக கட்டுப்பாடு, குரூஸ் கண்ட்ரோல், லேன் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, இன்டெலிஜென்ட் பார்க் அசிஸ்ட் உளளன. கிடைமட்ட ஒளிப் பட்டை கொண்ட முன்பக்க கிரில் போன்ற அம்சங்கள், இப்போது ஸ்போர்ட்லைன் டிரிம்மிலும் கிடைக்கின்றன. துவக்க ஷோரூம் விலையாக கோடியாக் லவுஞ்ச் சுமார் ரூ.36,99,000, ஸ்போர்ட் லைன் சுமார் ரூ. 44,99,000, செலக்ஷன் எல் அண்ட் கே சுமார் ரூ. 46,99,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


