சிவகங்கை: கீழடியில் 23 வயது இளைஞர் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் வெட்டிக் கொன்றது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில், இன்று கண்ணன் என்ற ஜேசிபி (JCB) ஓட்டுநரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு இலந்தைக்குளம் கிராமத்தில் நடந்த பொங்கல் விழாவின் போது ஏற்பட்ட தகராறில், கருப்புசாமி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில், தற்போது கொல்லப்பட்ட கண்ணன் 5-ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இன்று காலை இலந்தை குளம் கிராமத்திலிருந்து கண்ணன் இருசக்கர வாகனத்தில் வேளைக்கு கிளம்பியுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து 2 இருசக்கர வாகனத்தில் 5 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து வந்துள்ளது. கீழடி அருகே வரும்போது கண்ணன் வாகனத்தில் மோதி அவரை கீழே தள்ளி விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர்.
கடந்த பொங்கல் விழாவில் நடந்த கொலைக்கு பழிக்குப் பழியாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இன்று காலை இலந்தைக்குளம் கிராமத்தில் இருந்து கண்ணன் இருசக்கர வாகனத்தில் வேலைக்குக் கிளம்பியுள்ளார். அப்போது, அவரை இரண்டு இருசக்கர வாகனங்களில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பின்தொடர்ந்து வந்துள்ளது. கீழடி அருகே வந்தபோது, கும்பல் கண்ணனின் வாகனத்தின் மீது மோதி, அவரை கீழே தள்ளி, விரட்டி வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகங்கை எஸ்.பி மற்றும் டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.



