லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது லாகூர், அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2023 முதல் சிறையில் உள்ள இம்ரானை பார்ப்பதற்கு கடந்த ஒரு மாதமாக யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இம்ரானின் உடல் நிலை மோசமாகி இருக்கலாம் என்றும் சிறையிலேயே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் சிலர் சந்தேகம் எழுப்பி வந்தனர்.
இதனால் இம்ரானின் குடும்பத்தினர், அவரது கட்சி தொண்டர்கள் சிறை முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மா கானுக்கு அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் உஸ்மா கான் சிறையில் உள்ள இம்ரான் கானை நேற்று சந்தித்தார். அதன் பின் அவர் கூறுகையில்,‘‘ இம்ரான் நலமுடன் உள்ளார். அவர் உடல்நிலை நன்றாக உள்ளது. தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை மனரீதியாக சித்ரவதை செய்கின்றனர்’’ என்று குற்றம்சாட்டினார்.

