சென்னை: எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை, நெருக்கடி காரணமாக இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர் என திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 15 நாள்கள் நடந்ததே இல்லை. எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுப்பதை ஒரு வேலையாகவே பாஜக வைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் பேச அனுமதிதான் கேட்கிறோம்; அவைக்கு குந்தகம் விளைவிக்கவில்லை. நாடு முழுவதும் கொளுந்துவிட்டு எரியும் S.I.R குறித்து விவாதிக்க அவையில் பேச அனுமதிக்கப்படவில்லை. அவையில் பேச அனுமதி கேட்டால், அமளி செய்வதாக பாஜக கூறுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காததை ஒரு மரபாக பாஜக அரசு வைத்துள்ளது.
பேச அனுமதி கேட்டால், அமளி என அவதூறு செய்கின்றனர்"
ஒன்றிய அரசு சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவது எதிர்க்கட்சிகளின் வேலை அல்ல. பீகாரில் 64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது போல் வேறு எங்கும் நடைபெறக் கூடாது. S.I.R குறித்த விவாதத்தை அரசு ஏற்காததால் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். அவையில் பேச அனுமதிக்கும்படி நாடாளுமன்றத்தில் கேட்டால் அமளியில் ஈடுபடுவதாக அரசு அவதூறு.

