சர்வதேச டென்னிஸ் சங்கம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தியாலியை சேர்ந்த ஜானிக் சின்னர் முதலிடத்தை தக்க வைத்து உள்ளார். இரண்டாம் இடத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமியும், ஐந்தாவது இடத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் இடம்பிடித்துள்ளனர்.
ரஷியாவின் டேனில் மெத்வதேவ் ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடமும், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஒரு இடம் சரிந்து ஏழாவது இடமும் பிடித்து உள்ளார். சிட்டி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற டெய்லர் பிரிட்ஸ் 2 இடங்கள் முன்னேறி 8வது இடம் பிடித்து உள்ளார். இத்தாலியின் பிளேவியோ கோபாலி 9வது இடத்திலும், அமெரிக்காவின் பென் ஷெல்டன் இரு இடங்கள் சரிந்து 10-வது இடத்திலும் உள்ளனர்.
