தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல் இரங்கல்

சென்னை: பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Advertisement

ரஜினிகாந்த்: தன்னுடைய தேனமுத குரலால் தலைமுறை, தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

கமல்ஹாசன்: பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? இறக்கி வைக்க முடியாத சோகம் பலருக்கும் இருக்கும். அவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

கவிஞர் வைரமுத்து: கானக் குயிலே காலமானாயா? அரை நூற்றாண்டு ஆறுதலே அடங்கிவிட்டாயா? ‘சிங்கார வேலனே தேவா’வில் நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய கீதவாணியே முடிந்துவிட்டதா உன் மூச்சு? கண்ணதாசன் எழுதி நீ பாடிய பல்லவி கொண்டே புகழ்வணக்கம் செலுத்துகிறேன். ‘தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே... அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே... வாழ்க நீ அம்மா.

நடிகை சிம்ரன்: சில குரல்கள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக என்றென்றும் நிலைத்துவிடுகிறது. ஜானகி அம்மாவின் குரலும் அத்தகையதே. அவரது பாடல்கள் நம் இதயங்களில் என்றென்றும் வாாழ்ந்து கொண்டிருக்கும். அவரது அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா, அமைதியில் துயில்கொள்ளுங்கள். ஓம் சாந்தி.

இசை அமைப்பாளர் அனிருத்: ஜானகி அம்மா, அமைதியில் துயில் கொள்ளுங்கள். உங்கள் ஆசீர்வாதங்களை என்றென்றும் நினைவுகூர்வேன்.

பாடகி சின்மயி: அவர் ஒரு தேவி. 23 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜானகி அம்மாவுடன் பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் மேடையில் நேரடியாக ஒரு பாடலை பாடினார். அதில் அவரின் குரல் ஒரு குழந்தை போலவும், ஒரு பெண் போலவும், ஒரு ஆண் போலவும் ஒலித்தது.

நான் மேடைக்கு பின்னால் இருந்தேன். அந்த பாடலை முழுவதுமாக பாடுவது அவர்தான் என்று தெரிந்துகொள்ளும் வரை, அந்த ஆண் பாடகர் யார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கில் அவரது பங்களிப்புகள், நான் மிகவும் மதிக்கும் ஒரு பாடகி அவர். ஒருவேளை அங்கே அவர் முருகனுக்கு சிங்கார வேலனே தேவனாக இருப்பார்.

Advertisement

Related News