Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கணவர் மறைவுக்கு பின் மீண்டும் மேடை ஏறிய பாடகி: 3 ஆண்டுக்கு பின் ரசிகர்கள் முன் உருக்கம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்கன் ஐடல் நிகழ்ச்சியில் பாடகி கெல்லி பிக்லர் தனது கணவர் மறைவுக்குப் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பின் பங்கேற்றார். அமெரிக்காவின் பிரபல இசை நிகழ்ச்சியான அமெரிக்கன் ஐடல் மூலம் 2006ம் ஆண்டு அறிமுகமான பாடகி கெல்லி பிக்லர் (39). கடந்த 2023ம் ஆண்டு அவரது கணவரும் பிரபல பாடலாசிரியருமான கைல் ஜேக்கப்ஸ் காலமானார். கணவரின் மறைவால் கடும் மனவேதனையடைந்த கெல்லி பிக்லர், கடந்த 3 ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், 2006ம் ஆண்டு இசை குழுவினரின் 20 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கெல்லி பிக்லர் கடந்த 4ம் தேதி கலந்து கொண்டார். இதில் ஹன்னா ஹார்பருடன் இணைந்து, ‘ஏ புரோக்கன் விங்’ என்ற பாடலை அவர் பாடினார். இந்த உருக்கமான பாடலைக் கேட்டு நடுவர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். மேடையில் பேசிய கெல்லி பிக்லர், ‘பழைய நினைவுகள் மீண்டும் தூசி தட்டப்பட்டது போல உள்ளது. மீண்டும் வீட்டிற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று உருக்கமாகக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் டெய்லர் ஹிக்ஸ், எலியட் யாமின் உள்ளிட்ட சக கலைஞர்களும் கலந்து கொண்ட நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக சதவீத பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.