Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சிம்பிள் அல்ட்ரா ஸ்கூட்டர்

சிம்பிள் எனர்ஜி நிறுனம், சிம்பிள் அல்ட்ரா என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.5 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 400 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். அதிகபட்சமாக மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். 40 கிலோ மீட்டர் வேகத்தை 2.77 நொடிகளில் எட்டும். இதில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், 7 அங்குல டிஸ்பிளே இடம் பெற்றுள்ளன. இதற்கு முன்பு நடப்பு ஆண்டில் இந்த நிறுவனம் சிம்பிள் ஒன் மற்றும் சிம்பிள் ஒன்ஸ் ஆகிய வேரியண்ட்களை அறிமுகம் செய்திருந்தது. தற்போது சிம்பிள் அல்ட்ரா வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை அறிமுகம் செய்திலேயே ஒரு முறை சார்ஜில் அதிக பயண தூரம் செல்லக்கூடிய ஸ்கூட்டர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.2.35 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.