வெள்ளி நகைகள் மீது கடன் வழங்கும் நடைமுறை வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான ஒப்புதலை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கி உள்ளது. வெள்ளி நகைக்கடன் விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
வெள்ளி நகைகள் அல்லது நாணயங்கள் மீது மட்டுமே கடன் வழங்கப்படும் என்றும் வெள்ளி கட்டிகள் மீது வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 கிலோ வரையிலான வெள்ளி நகைகள், அரை கிலோ வரையிலான வெள்ளி நாணயங்களுக்கு கடன் வழங்கப்படும். வெள்ளியின் பணமதிப்பில் 70 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை கடனாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
