சில்லி பாயின்ட்…
* டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக முன்னாள் வேகம் சமிந்தா வாஸ் (இலங்கை), சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஷ்ரா (இந்தியா) நியமிக்கப்பட்டுள்ளனர். கேப்பிடல்சின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பேட்டிங் பயிற்சியாளராக ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
* இங்கிலாந்து அணிக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் நடந்த டெஸ்ட் போட்டியில், தாமதமாகப் பந்துவீசிய பாகிஸ்தான் அணிக்கு 11 புள்ளிகள் (உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
* இங்கிலாந்து தொடரில் மோசமாக விளையாடியதற்காக அதிரடியாக நீக்கப்பட்ட பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சல்மான் ஆஹா, உள்ளூர் போட்டியில் களமிறங்கி முச்சதம் விளாசியுள்ளார். கிங்ஸ்மென் அகடமி அணிக்காக களமிறங்கிய அவர், மார்கோர் ஐடி சொல்யூஷன்ஸ் அணிக்கு எதிராக 336 பந்தில் ஆட்டமிழக்காமல் 300 ரன் விளாசினார்.
* இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி வீராங்கனைகள், பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி பங்கேற்றதால் கோப்பையை பெற மேடைக்கு வராமல் புறக்கணித்தனர். மோஷின் நக்வி பாகிஸ்தான் அமைச்சராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
* ஆஸ்திரேலியா - நமீபியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்குகிறது.
* உலக கோப்பை வில்வித்தை ஆண்கள் ரீகர்வ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை திராஜ் பொம்மதேவரா வசமாகி உள்ளது. மெக்சிகோவில் நடந்த போட்டியில் அவர் ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை 6-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதலிடம் பிடித்தார்.
* ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி (ஆண்கள்) பைனலில் கொரியாவுடன் மோதிய இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது. 6வது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை வென்ற இந்தியா ஜூனியர் உலக கோப்பை தொடரில் விளையாடவும் தகுதி பெற்றது.