* ஜிம்பாப்வே, தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன், மேட் ஷார்ட், பென் துவார்ஷுயிஸ், டாட் மர்பி, லியாம் ஸ்காட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்.
* இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி எதிரொலியாக தலைமைப் பயிற்சியாள,ர் பந்துவீச்சுப் பயிற்சியாளர் நீக்கப்பட்ட நிலையில், தேர்வுக் குழுவிலிருந்து முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் ராஜினாமா செய்துள்ளார்.
* கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ட்ரின்பகோவை வீழ்த்தி கயானா அபார வெற்றி பெற்றது. ஹெட்மயர் அதிகபட்சமாக 111 ரன்கள் குவித்தார்.
* லா லிகா கால்பந்து தொடரில் ராயோ வலேகானோ அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றது.



